செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (22:19 IST)

இடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு!

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலை சந்திக்க திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர் அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல், அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி என்பதால், இந்த இரு தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசு அதிகம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இரண்டு திராவிட கட்சிகளும் வைட்டமின் ‘ப’வை அள்ளி வீசும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
 
மேலும் எந்த கட்சி அதிகமாக தீபாவளி பரிசு வழங்குகிறதோ, அந்த கட்சி இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார். அதுமட்டுமின்றி இந்த இரு தொகுதிகளில் அமமுக போட்டியிடவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் சுமார் 8000 வாக்குகளும், நாங்குநேரி சட்டசபை தொகுதியில் சுமார் 15 ஆயிரம் வாக்குகளும் அமமுக பெற்ற நிலையில் இந்த வாக்குகள் தற்போது அதிமுகவுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் 

 
மேலும் இந்த தேர்தலைன் முடிவை பொருத்தவரை அதிமுக மற்றும் திமுகவிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், இந்த தேர்தலின் முடிவால் அதிமுக ஆட்சியை இழக்கப்போவதும் இல்லை, திமுக ஆட்சியை பிடிக்கப்போவதும் இல்லை என்பதால் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கு பெரிய முக்கியத்துவம் தர வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.