செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (20:15 IST)

நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் யார்? ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே தயாராகி வருகின்றது 
 
 
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை என தினகரன் கட்சி மற்றும் கமல்ஹாசன் கட்சி அறிவித்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் அறிவிப்பை வெளியிடவில்லை, மற்ற கட்சிகள் அனைத்தும் அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் இன்று மதியம் திமுக நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக புகழேந்தி போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
 
இதனை அடுத்து அதிமுக வேட்பாளர் யாராக இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டது. இந்த நிலையில் நாங்குநேரி. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
 
இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தல் என்பது திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே ஒரு பலப்பரிட்சையாக பார்க்கப்படுகிறது. விரைவில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கும் இந்த இடைத்தேர்தல் ஒரு முன்னோடியாக இருக்கும் என கருதப்படுவதால் இந்த தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது