வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (21:51 IST)

பாஜக அமைச்சர்களை திமுக எம்பிக்கள் சந்திப்பது ஏன்? பிரேமலதா

கடந்த மக்களவைத் தேர்தலை 37 தொகுதிகளில் வென்ற திமுக கூட்டணி எம்பிக்கள் அவ்வப்போது பாஜக மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாஜக அமைச்சர்களை திமுகவினர் சந்தித்தது ஏன் என்பது குறித்து வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவர்கள் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
 
பாஜகவை பிடிக்காது என்றும் பாஜக ஆட்சியை எதிர்த்துக் கொண்டும் வரும் திமுகவினர் மத்திய அமைச்சர்களை சந்திப்பது தங்களுடைய சொந்த காரியங்களை சாதித்துக் கொள்வதற்குத்தான் என்றும், மத்திய அமைச்சர்களை திமுகவினர் சந்திப்பது தமிழக மக்களுக்காக அல்ல என்றும் அவர் கூறியுள்ளார் 
 
மேலும் வேலூர் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறிய பிரேமலதா இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு தரும் ஒரே கூட்டணியில் அதிமுக கூட்டணி என்றும் இஸ்லாமியர்களின் உற்ற தோழனாக விஜயகாந்த் மட்டுமே இருந்து வந்தார் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக இலவச அரிசி வழங்கியவர் என்றும், அதேபோல் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சினிமாவில் மட்டுமே நடிக்க தெரிந்தவர்கல் என்றும் மக்களுடன் நடிக்க தெரியாதவர்கள் என்றும் பிரேமலதா கூறினார்