1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (09:48 IST)

தலைக்காட்டாத கனிமொழி... தலைமையின் ஆதிக்கமா? திமுகவில் நடப்பது என்ன??

வேலூர் தொகுதி பிரச்சாரத்தில் கனிமொழி பங்கேற்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா காரணமாக வேலூர் தொகுதி தேர்தல், தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்த தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதிமுக மற்றும் திமுகவில் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட அதே வேட்பாளர்கள் இந்த முறையும் போட்டியிட்டுள்ளனர். எனவே இரு கட்சிகளும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். வழக்கம் போல் மாற்றி மாற்றி குற்றங்களை சுமர்த்திக்கொண்டு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். 
திமுகவை பொருத்த வரை வேலூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சாரத்தில் கனிமொழியை காண முடியவில்லை. 
 
ஒருவேளை ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருமே பிரச்சாரத்திற்கு போதுமானவர்கள் என தலைமை எண்ணிவிட்டதா அல்லது உதயநிதியை வளர்த்துவிட கனிமொழி ஒதுக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
 
சமீபத்தில் அதிமுக அமைச்சர் ஜெயகுமாரும், கனிமொழி பிரச்சாரத்திற்கு வராதது ஏன்? திமுகவில் உட்கட்சி பூசல் உள்ளது. விரைவில் அது வெடிக்கும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.