புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 31 ஜூலை 2019 (15:29 IST)

தமிழகத்தில் மோடிக்கு இரண்டு அடிமைகள்: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் மோடிக்கு இரண்டு அடிமைகள் இருப்பதகவும் அவர்கள் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என யாரைக்கேட்டாலும் சொல்வார்கள் என்றும் வேலூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 
 
வேலூர் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் மேலும் பேசியதாவது: நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக தி.மு.க கூட்டணிக்குத் தமிழக மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர். தமிழக மக்கள் மோடிக்கும், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்பட எதிர்த்தரப்பினர் அனைவருக்கும் சரியான பதிலடி கொடுத்தனர். இதேபோல் மீண்டும் பதிலடி கொடுக்க உங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
 
 
நான் இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். டி.எம்.கே என்றால் தி.மு.க என்பது மட்டும் பொருளல்ல, டி.எம்.கதிர் ஆனந்த் என்பதையும் குறிக்கும். 
 
 
கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடந்திருந்தால் கதிர் ஆனந்த் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார். வரும் 5-ம் தேதி நீங்கள் ஓட்டு போடுங்கள். ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதி நம்மை விட்டுப் பிரிந்து சென்ற தினம். வேலூர் வெற்றியை அவருக்குக் காணிக்கையாக செலுத்துவோம்’’ என்று பேசினார்.
 
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது திமுக தலைவர் ஸ்டாலின் பாணியில் கூலித் தொழிலாளர்களுடன் சகஜமாக பழகுவதுடன், அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வது, செல்ஃபி எடுத்துக்கொள்வது என உதயநிதி அசத்தினார். அவரது புதிய பாணியை வேலூர் தொகுதி மக்கள் மிகவும் ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்க்கது