நாங்க பிறவியிலேயே ரவுடி.. பூச்சாண்டி காட்டும் அதிமுக அமைச்சர்!

Last Modified புதன், 31 ஜூலை 2019 (12:21 IST)
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நீங்கெல்லாம் இப்பதான் ரவுடி, ஆனா நாங்க பிறவியிலேயே ரவுடி என திமுகவை மிரட்டிவிட்டுள்ளார். 
 
ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதி தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் வேலூர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு... 
 
1972 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 3 முறை புரட்சி தலைவர் எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அப்பேற்பட்ட இந்த கட்சியை அம்மா வழி நடத்தி வந்தார். அவர், அறிவித்த எல்லா திட்டங்களையும் தொண்டர்களாகிய நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். 
அன்றைக்கு புரட்சி தலைவர் இருக்கும் போது 17 லட்சம் தொண்டர்கள் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது. 
 
எனவே, அதிமுக தொண்டர்களிடம் பூச்சாண்டி காட்டும் வேலையெல்லாம் வைத்துக்கொள்ளக்கூடாது. நீங்கெல்லாம் இப்பதான் ரவுடி, ஆனா நாங்க பிறவியிலேயே ரவுடி.. முதல்வர் கை அசைத்தால் போதும், திமுகவையே அழித்துவிடுவோம் என பேசியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :