திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (09:31 IST)

வேட்பாளராக முதன்முறையாக பிரேமலதா! செண்டிமெண்டாக கணவர் தொகுதியில் போட்டி!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ள நிலையில் முதன்முறையாக பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளராக களம் காண்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னதாக நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படாமல் அதிலிருந்து விலகிய தேமுதிக பல்வேறு கட்ட ஆலோசனைகள் மற்றும் பேச்சுவார்த்தைக்கு பிறகு அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உடனடியாக 60 இடங்களுக்குமான தேமுதிக வேட்பாளர்கள் பட்டியலை தேமுதிக வெளியிட்டுள்ளது. அதில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட உள்ளார். முதன்முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டு வென்ற விருதாச்சலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிட உள்ளார். உடல்நல குறைவு காரணமாக விஜயகாந்த் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.