1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 மார்ச் 2021 (08:22 IST)

இந்தியாவில் முதன்முறையாக இருமுறை உருமாறிய கொரோனா! – சுகாதாரத்துறை அமைச்சகம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்து வரும் நிலையில் இருமுறை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டிவிட்ட நிலையில் சமீப காலமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதும், மற்ற நாட்டு மாற்றமடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட 10,787 மாதிரிகளை சோதனை செய்ததில், 771 உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 736 மாதிரிகள் இங்கிலாந்து உருமாறிய கொரோனாவும், 34 மாதிரிகள் தென் ஆப்பிரிக்க மற்றும் ஒரு பிரேசில் உருமாறிய கொரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சில மாநிலங்கள் அனுப்பி வைத்த மாதிரிகளில் இருமுறை உருமாறிய கொரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா எதிர்ப்புசக்திகளுக்கு கட்டுப்படாதது. மேலும் தொற்றை அதிகரிக்கும்” என கூறப்பட்டுள்ளது.