1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2018 (16:43 IST)

சரக்கா? ஜல்லிக்கட்டா? - இதுவல்லவா பட்டிமன்றத்தின் தலைப்பு

பொங்கல் பண்டிகையின் போது மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் நடைபெறவுள்ள பட்டிமன்றத்திற்கு வித்தியாசமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 
சென்னையை மையமாக கொண்டு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் செயல்பட்டு வருகிறது. குடிப்போருக்கு புணரமைப்பு, குடிக்காதவர்களுக்கு பாதுகாப்பு என்ற கொள்கையயை முன்னிறுத்தி செயல்படும் இந்த அமைப்பு குடிப்பவர்களுக்கு ஆதரவாக சிரிப்பை வரவழைக்கும் அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
 
இந்நிலையில், வருகிற 15ம் தேதி பொங்கலின் போது இந்த சங்கம் சார்பில் ஒரு பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. “பொங்கல் திருவிழாவின் போது தமிழர்கள் பெரிதும் விரும்புவது சரக்கா, ஜல்லிக்கட்டா” என்பதுதான் அவர்கள் வைத்துள்ள தலைப்பு.
 
சென்னை கொரட்டூரில் நடைபெறும் இந்த பட்டிமன்றத்திற்கு இந்த சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் நடுவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதுவரைக்கும் பல தலைப்புகளில் பட்டிமன்றத்தை பார்த்த தமிழர்களுக்கு இந்த பட்டிமன்றம் சிரிப்பை வரவழைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.