1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 ஜனவரி 2018 (23:12 IST)

பொங்கல் ரிலீஸ் படங்கள் எத்தனை? ஒரு பார்வை

வரும் பொங்கல் தினத்தில் தானா சேர்ந்த கூட்டம்' 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'குலேபகாவலி', 'கலகலப்பு 2', 'மதுர வீரன்', 'மன்னர் வகையறா', 'நிமிர்', 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'ஸ்கெட்ச்' மற்றும் 'அண்டாவ காணோம்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இவற்றில் தானா சேர்ந்த கூட்டம்' 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'குலேபகாவலி', ஆகிய மூன்று படங்கள் மட்டுமே தற்போது ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை வெளியிட்டு ரிலீசை உறுதி செய்துள்ளன.

விக்ரமின் ஸ்கெட்ச் திரைப்படம் இன்னும் ஓரிரு நாட்களில் சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மற்ற படங்கள் சரியான திரையரங்குகள் கிடைத்தால் மட்டுமே ரிலீஸ் ஆகும் என்றும், இல்லையேல் வரும் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப்போகும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய்யின் 'பைரவா' மற்றும் பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது