மோடி - ஜின்பிங் உடன் டின்னருக்கு இணைகிறாரா ரஜினி??

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 11 அக்டோபர் 2019 (09:03 IST)
மாமல்லபுரம் வரும் சீன அதிபருடன் விருதுக்கு இணைய ரஜினிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்த விளக்கம் வெளியாகியுள்ளது. 
 
சீன அதிபர் ஜின்பிங்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இன்று  மாமல்லபுரத்தில் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சில அமைசர்களுடன் சென்று நேற்று பார்வையிட்டனர். 
 
சீன அதிபர் உடனான சந்திப்பில் கலந்து கொள்ள அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது செய்திகள் வெளியாகி நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 
 
ஆனால், இந்த தகவல் வெறும் வதந்தி எனவும், ரஜினிக்கு எந்த வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என ரஜினியின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் அகமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :