1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pon Radhakrishnan criticize on DMK Congress

”விஷம பிரச்சாரம் பரப்பியவர்களுக்கு அழிவு தான்” பாயும் பொன்னார்

தமிழகம்
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விஷம பிரச்சாரத்தை செய்தவர்கள் அழிவுக்கு ஆளாவார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக நாடு முழுவதும் மாணவ அமைப்புகள், உட்பட பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் எதிர்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேரணி நடத்தியது. மேலும் கோலப்போராட்டங்களும் நடைபெற்றது.

இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை தெளிவாக மக்களிடம் விளக்க பாஜகவினர் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ”குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விஷம பிரச்சாரத்தை செய்தவர்கள், அழிவுக்கு ஆளாவார்கள்” என பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

மேலும் “திமுகவும் காங்கிரஸும் பிணம் தின்னி அரசியல் செய்கின்றனர்” எனவும் காட்டமாக தன்னுடைய கருத்தையும் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
லேட்டா வந்தாலும் லேடஸ்ட்டாய் வெளிவரும் ஹானர்!!