வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (10:16 IST)

நேற்று வென்ற ஊராட்சி தலைவர் இன்று மரணம்! – பெரம்பலூரில் சோகம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றைய வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இன்று மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஊராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய வாக்கு எண்ணிக்கையில் பெரம்பலூர் மாவட்ட ஆதனூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மணிவேல் என்பவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட 163 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

இதனால் ஆதனூர் கிராம ஊராட்சி தலைவராக மணிவேல் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை திடீரென அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஆதனூர் பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.