வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (09:15 IST)

தபால் ஓட்டு எண்ணுவதில் முறைகேடு: தேர்தல் அதிகாரியிடம் சீறிய தருமபுரி எம்.பி

தருமபுரி உள்ளாட்சி தேர்தலில் சில வார்டுகளில் தபால் ஓட்டுகளை எண்ணியதில் முறைகேடு செய்துள்ளதாக தருமபுரி எம்.பி தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக ஊராட்சி உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தருமபுரியில் 8வது மற்றும் 18வது வார்டுகளுக்கான தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போது ஏஜெண்டுகள் இல்லாமல் அதிகாரிகளே எண்ணி பட்டியல் தயார் செய்து விட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாள் போலீஸார், திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி செந்தில்குமார் மீண்டும் தபால் ஓட்டுகளை எண்ண வேண்டும் என மனு அளித்துள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியுள்ளது.