திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (13:19 IST)

அமெரிக்காவுக்கு நாங்கதான் அவெஞ்சர்ஸ்! – ஈரான் தலைவர் கமேனி அறைகூவல்!

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணிவ தலைவர் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்குவோம் என ஈரான் தலைவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தில் இன்று காலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்படி தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈராக் ராணுவத்தின் தளபதி உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளதால் ஈராக்கில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஈரான் கைப்பற்றியதால் அமெரிக்க தூதரகம் அருகே பெரிய அளவில் அமெரிக்க ராணுவ படைகள் குவிக்கப்பட்ட நிலையில் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் ஆரம்பிக்கலாம் என கருதப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவுப்படி டிரோன் விமானங்கள் மூலம் அமெரிக்க படைகள் தொடர்ந்து ஈரான் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது ஈரான் ராணுவ தளபதி குஸ்ஸம் சுலைமானி சென்ற ஹெலிகாப்டரையும் தாக்கியுள்ளது அமெரிக்கா. அவருடன் ராணுவ கமாண்டர் அப் மஹ்தி அல் முஹாண்டிஸும் கொல்லப்பட்டுள்ளார்.

இது ஈரான் மற்றும் ஈராக் நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா திட்டமிட்டே சுலைமானியை கொன்றிருப்பதாக ஈரான் ஊடகங்கள் பேசி வரும் நிலையில் அதை உறுதி படுத்தும் விதமாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி மைக் போம்பியோ என்பவர் ஈராக்கியர்கள் நடனம் ஆடும் வீடியோவை பதிவிட்டு “ஜெனரல் சுலைமானி இல்லை என்பது நல்லது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஈரான் தலைவர்கள் அமெரிக்காவுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி ‘அமெரிக்கா செய்த செயலுக்கு ஈரான் மற்றும் மற்ற சுதந்திர நாடுகளும் இணைந்து தக்க பதிலடி கொடுக்கும்” என கூறியுள்ளார். ஈரான் உயர் தலைவர் அயதொல்லா அலி கமேனி “இந்த நாட்டின் நலம் விரும்பிகள் அனைவரும் அமெரிக்காவுக்கு பகைவர்கள்” என பேசியுள்ளார்.