1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Anbumani Ramadoss says about rain water

ரூ.4000 கோடி வடிவால் பணிக்கு வெள்ளை அறிக்கை வேண்டும்: அன்புமணி பேட்டி..!

Anbumani
சென்னையில் 4000 கோடி செலவு செய்து வடிகால் பணிகள் மேற்கொண்டதாக அரசு கூறி இருக்கும் நிலையில் இது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.

ரூ.4000 கோடி மழைநீர் வடிகால் பணி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் புயல் பாதித்த மாவட்டங்களில் ஒரு மாதம் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சென்னையில் நோய் தொற்றை தடுக்க ஒவ்வொரு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்றும் அவர் பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை தரமணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை பாமக தலைவர் அன்புமணி தனது கையாலே வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
வெள்ள நிவாரணம்: ரூ.5000 கோடி கேட்ட முதல்வர்.. பிரதமர் ஒதுக்கிய தொகை அறிவிப்பு..!