அவினாசி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் இன்னும் தொடங்காத வாக்குப்பதிவு!
அவினாசி தொகுதியில் வாக்குப்பதிவு எந்திர கோளாறு காரணமாக இன்னும் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை.
தமிழகத்தில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது. இந்நிலையில் அவினாசி தொகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 218 ல் வாக்கு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் இன்னமும் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை. ஏற்கனவே சேலம் ஓமலூர் தொகுதியிலும் ஒரு வாக்குச்சாவடியில் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.