பொள்ளாச்சி பாலியல் வீடியோ விவகாரம் - நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி சம்மன்

NAKERAN
Last Updated: செவ்வாய், 19 மார்ச் 2019 (19:31 IST)
சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக திருநாவுக்கரசு, செந்தில், சபரிராஜ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை போலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
 
இந்த பிரச்சனை வெளியான சமயத்தில் துணைசபாநாயகரை தொடர்பு படுத்தி பேசியிருந்தார். இது சம்பந்தமாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில்  நக்கீரன் கோபாலுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர்.
 
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நக்கீரன் கோபாலின் வக்கீல் ஆஜராகி அவர் வெளியூரில் இருப்பதாக தெரிவித்தார்.
 
மேலும் வரும் 21 ஆம் தேது நக்கீரன் கோபால் விசாரணைக்காக ஆஜராவார் என்று தெரிகிறது.
 
இந்நிலையில் தற்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸார் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளார்.
 
வரும் 25 ஆம் தேதி அதில் கோபால் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 

 
 


இதில் மேலும் படிக்கவும் :