12 வயது மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது

Last Modified திங்கள், 18 மார்ச் 2019 (12:07 IST)
சென்னையில் 12 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை குறுக்குப்பேட்டை பாரதியார் நகர் குடியிருப்பு பகுதியில் தந்தையை பிரிந்து தாயுடன்   வசித்து வரும் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சற்று மனநிலை சரியில்லாதவர் ஆவார்.
 
இந்நிலையில் அப்பகுதியில் டுயூசனுக்கு சென்ற மாணவியிடம் 3 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது.
 
இதுபற்றி தகவல் அறிந்த குழந்தைகள் நல அமைப்பினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில்  72 வயது முதியவர் ராஜரத்தினம், கூலித் தொழிலாளிகளான ராஜா மற்றும் லட்சுமணம் ஆகிய மூவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :