வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (11:55 IST)

கவுண்டமணி போல எட்டி உதைத்த போலீஸ்! – பணியிடை நீக்கம் செய்த ஆய்வாளர்!

Crime
ஆடு திருடிய நபரை இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்த வீடியோ வெளியான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காவிலிபாளையம் பகுதியில் விவசாயி ஒருவரின் ஆடு வீட்டிற்கு வெளியே கட்டி இருந்துள்ளது. அதை இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் திருடி செல்ல முயன்றுள்ளனர். இதனை கண்டு அந்த விவசாயி கத்தியுள்ளார்.

இதை கேட்டு விரைந்த மக்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்களை துரத்தி பிடித்தனர். அதில் ஒருவர் தப்பிவிட ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். அவரை பிடித்த மக்கள் போலீஸ்ய்க்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அங்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் முருகேஷ் ஆடு திருடியவரின் அந்தரங்க பகுதியில் உதைத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முருகேஷை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.