1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 4 மே 2024 (11:35 IST)

விபத்து சிக்கிய காவல்துறை வாகனம்..! கைதான சவுக்கு சங்கருக்கு காயம்.!

Savuku Sankar
சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில் அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவைக்கு அழைத்துச் சென்ற காவல்துறை வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. 

 
காலில் லேசான காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று வாகனத்தில் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.