1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. savukku sankar arrested by cyber crime police

பெண் காவலர் குறித்து சர்ச்சை கருத்து: சவுக்கு சங்கர் அதிரடி கைது..!

savukku shankar
பெண் காவலர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அரசியல் விமர்சகர் மற்றும் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேனியில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவரை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தேனிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சவுக்கு சங்கர் மீடியாவில் இருப்பவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சவுக்கு சங்கரும் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சவுக்கு சங்கர் தேனியில் இருந்து கோவை அழைத்து சென்றதும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
கெஜ்ரிவாலுக்கு ஏன் ஜாமின் வழங்கக்கூடாது.? ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!