ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 மே 2024 (15:11 IST)

பெண் மேயருக்கு ஆபாச மெசேஜ்.. அரசு பேருந்து ஓட்டுனர் கைது..!

பெண் மேயருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய அரசு பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற நிலையில் திருவனந்தபுரம் பெண் மேயர் ஆர்யா என்பவரின் கார் அந்த பேருந்துக்கு பின் வந்துள்ளது

அந்த  நிலையில் மேயர் காருக்கு வழிவிடாமல் ஓட்டுநர் பேருந்தை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஒரு கட்டத்தில் அந்த பேருந்தை முந்தி சென்ற கார் பேருந்தை மறித்து உள்ளது. அப்போது மேயர் ஆர்யா ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் மேயர் ஆர்யாவை பழி வாங்குவதற்காக ஓட்டுநர் அவரது செல்போனுக்கு ஆபாச மெசேஜ் மட்டும் மிரட்டல் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மேயர் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஓட்டுனர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Edited by Siva