செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 மே 2024 (06:46 IST)

பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம்! பரபரப்பு தகவல்..!

Prajwal Revanna
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என கர்நாடக போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
பாஜகவின் கூட்டணி கட்சி வேட்பாளரான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கர்நாடக அரசியலை இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது

 இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா திடீரென ஜெர்மனிக்கு தப்பிச் சென்றுள்ளார் என்றும் அவர் நாடு திரும்பியதும் அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன

பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வீடியோவை நான் தான் கொடுத்தேன் என அவரது ஓட்டுநர் கூறியிருக்கும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சியினர் கடுமையாக இதுகுறித்து விமர்சனம் செய்து வரும் நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த வழக்கை சிறப்பு தணிக்கை குழு விசாரிக்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி தப்பி சென்றுள்ள நிலையில் அவர் திரும்பி வந்ததும் கைது செய்யப்படுவார் என்றும் அதற்கான முழு ஏற்பாடுகளும் தயார் நிலையில் கர்நாடக மாநில போலீசார் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Edited by Siva