தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைய முயற்சி: கைது செய்யப்படுவாரா தங்கத்தமிழ்செல்வன்?
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, திமுகவை சமாளிப்பதைவிட தினகரன் அணியினர்களை சமாளிப்பதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
டிடிவி தினகரன் அளிக்கும் ஒவ்வொருஅதிரடி பேட்டியும் தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. அவருக்கு பதிலளிக்கவே தமிழக அமைச்சர்களின் பாதி நேரம் கழிந்துவிடுகிறது.
இந்த நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களான தங்கத்தமிழ்ச்செலவன், வெற்றிவேல் ஆகிய இருவரும் நேற்று சென்னை தலைமைமை செயலகத்தில் போலீசாரின் அனுமதியை மீறி உள்ளே செல்ல முயற்சி செய்தனர். இதனைஅடுத்து தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் அவர்கள் கைது செய்யப்படுவாரகளா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்