திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2018 (21:39 IST)

மோடியின் சென்னை வருகை ஓபிஎஸ்க்கு முதல்வர் பதவி பெற்றுக்கொடுக்கவே - தங்கத்தமிழ்செல்வன்

பிரதமர் மோடியின் சென்னை வருகை ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி பெற்றுத்தரவே என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ் செல்வன் கூறியுள்ளார்.

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அம்மா ஸ்கூட்டர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். மோடியின் சென்னை வருகை டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ் செல்வன் கூறியதாவது:- 
 
மோடி சொல்லிதான் இபிஎஸ் உடன் சேர்ந்தேன் என்கிறார் ஓபிஎஸ். ஒரு வருடம் கழித்து முதல்வர் பதவி அவருக்கு தருவதாகதான் ஒப்பந்தம். இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தவே மோடி சென்னை வருகிறார். அம்மா ஸ்கூட்டர் வழங்க வருகிறார் என்பது இரண்டாம் பட்சம்தான். அந்த பேச்சு வார்த்தை சரியாக முடியவில்லை என்றால் குழப்பம்தான் என்று கூறியுள்ளார்.