திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (13:25 IST)

தேர்தல் போது ஒருவரை தாக்கிய ஜெயக்குமார்! – வழக்குப்பதிவு செய்த போலீஸ்!

நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது திமுக தொண்டரை தாக்கிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் இன்று மறு தேர்தல் நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது வாக்குச்சாவடி அருகே திமுக தொண்டருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதனால் திமுக தொண்டரை தாக்கிய ஜெயக்குமார் அவரை சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக இழுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் மற்றும் 40 பேர் மீது 8 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.