1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pon Radhakrishnan about mellore hijab issue

பாஜக பூத் ஏஜெண்ட் செய்ததில் எந்த தவறும் இல்லை! – பொன்னார் சப்போர்ட்!

Tamilnadu
மதுரை மேலூரில் வாக்குச்சாவடியில் ஹிஜாபை அகற்ற பாஜக பூத் ஏஜெண்ட் கூறியதில் தவறில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 19ம் தேதி நகர உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் மதுரை மேலூரில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க சென்ற பெண்ணை பாஜக பூத் ஏஜெண்ட் ஹிஜாபை அகற்ற சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஏற்பட்ட தகராறில் பாஜக பூத் ஏஜெண்ட் வெளியேற்றப்பட்டதுடன், அவர்மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் , முக அடையாளத்தை உறுதி படுத்தவே ஹிஜாபை அகற்றும்படி பாஜக வாக்குசாவடி முகவர் கேட்டதாகவும், அவரது செயலில் எந்த தவறும் இல்லையென்றும் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
தூத்துக்குடி - இலங்கை: ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!