1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Police file case against actress Vanitha

நடிகை வனிதா மீது போலீஸார் வழக்குப் பதிவு !

Police file case
சமூக வலைதளங்களில் அண்மைக் காலமாக நடிகை வனிதா பீட்டர் பால் எனபவரை மூன்றாவதாக திருமணம் செய்தது தொடர்பாக செய்திகளே இடம் பிடித்து வந்தது. இதில் அவர் லட்சுமி ராமகிருஷ்ணனை கிழித்து தொங்கவிட்டுறுவேன் என்று சாடினார்.

அடுத்து அவர் சூர்யாதேவி என்ற பெண் மீது புகார் கொடுத்ததை அடுத்து, அவரைப் போலீஸார் கைது செய்தனர். பின்ன அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னை போரூர் போலீஸார் வனிதா விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதாவது சென்னை,ஐயப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக குடியிருப்ப்பு சங்க பொதுச்செயலாளர் நிஷாதோட்டா என்பவர் அளித்த புகாரின் பேரில் வனிதா மீது 3 பிரிவுகளில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
ரஜினிகாந்த் இபாஸ் விவகாரம்: சென்னை மாநகராட்சி ஆணையரின் பதில்!