1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 23 ஜூலை 2020 (11:41 IST)

சூர்யாதேவி கைது: களத்தில் இறங்கிய கஸ்தூரியால் பரபரப்பு

நடிகை வனிதா திருமணம் குறித்து அவ்வப்போது காரசாரமாக விமர்சனம் செய்து யூடியூபில் வீடியோ வெளியிட்ட சூர்யா தேவி நேற்று இரவு திடீரென கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யா தேவி மட்டுமின்றி கஸ்தூரி உள்பட 4 பேர் மீது வனிதா புகார் கொடுத்துள்ளதால் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் சில நிமிடங்களுக்கு முன்னர் தான் தூங்கி எழுந்ததாகவும், தூங்கி எழுந்தவுடன் பார்த்த முதல் செய்தி சூர்யா தேவி கைது செய்தி தான் என்றும் உடனடியாக அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த நடவடிக்கையை எடுத்து விட்டு அதன் பின்னர் மீண்டும் இது குறித்து ஒரு வீடியோவை பதிவு செய்கிறேன் என்று கூறியுள்ளார் 
 
மேலும் தான் உள்பட 4 பேர் மீது வனிதா புகார் கொடுத்துள்ளதாகவும் அந்த புகார் காமெடியை பின்னர் மெதுவாக பார்த்துக்கொள்ளலாம் என்றும் கஸ்தூரி கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் சூர்யாதேவியை காப்பாற்ற கஸ்தூரி நேரடியாக களமிறங்கியுள்ளதால் இந்த விவகாரம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.