திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 23 ஜூலை 2020 (11:02 IST)

வனிதா திருமண விவகாரம்: சூரியாதேவி அதிரடி கைது

வனிதா திருமண விவகாரம்: சூரியாதேவி அதிரடி கைது
வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் குறித்த சர்ச்சைகள் கடந்த சில நாட்களாக கொரனோ பரபரப்பையும் மீறி ஊடகங்களில் தலைப்புச் செய்திகள் ஆகி வருகிறது என்பது தெரிந்ததே 
 
வனிதா திருமணம் குறித்து திரையுலகினர் சிலரும், சூர்யா தேவி என்ற பெண்ணும் தங்களது யூடியூப் பக்கங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வீடியோக்களை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோக்களுக்கு வனிதாவும் பதிலடி கொடுத்து வந்தார் 
 
இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா தேவி என்ற பெண்ணின் மீது வனிதா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதேபோல் வனிதா மீதும் சூர்யா தேவி புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வடபழனி காவல் துறையினர் இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கல். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிகிறது
 
இந்த நிலையில் நேற்று இரவு விசாரணைக்காக சூர்யா தேவியை காவல்துறையினர் அழைத்துச் சென்றதாகவும் அதன் பின் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் பெரும் எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது பீட்டர் பால் என்பவரை நடிகை வனிதா தேவி சமீபத்தில் திருமணம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது