வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 ஜூன் 2021 (09:26 IST)

கரும்பூஞ்சை மருந்து கள்ளச்சந்தையில் விற்றால்…? – அமைச்சர் கடும் எச்சரிக்கை!

தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்றுக்கான மருந்துகள் கள்ள சந்தையில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கரும்பூஞ்சை தொற்று பாதிப்புகள் பீதியை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றை கட்டுப்படுத்தவும் மருத்துவமனைகளில் தனி படுக்கைகள், மருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழத்தில் நேற்று ஒரே நாளில் 3.26 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரே நாளில் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால் மக்கள் தடுப்பூசி முகாம்களில் முண்டியடித்து செல்ல வேண்டாம்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் “கரும்பூஞ்சை தொற்றை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கரும்பூஞ்சை தொற்றுக்கான மருந்துகளை கள்ள சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.