1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (07:39 IST)

ரோந்துப்பணியில் ஈடுபட்ட காவலர் உயிரிழப்பு: மீண்டும் ஒரு சுவர் விபத்து!

ரோந்துப்பணியில் ஈடுபட்ட காவலர் உயிரிழப்பு: மீண்டும் ஒரு சுவர் விபத்து!
பழைய கட்டடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் உயிரிழந்ததாகவும் இன்னொரு காவலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சமீபத்தில் நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் மதுரையில் கீழவெளி பகுதியில் ரோந்து பணியில் இரவில் காவலர் சரவணன் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த பழைய கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
 
அவருடன் இருந்த மற்றொரு காவலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ச்சியாக பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிர்ப்பலி ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.