புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 20 டிசம்பர் 2021 (16:21 IST)

135 வயது சீன மூதாட்டி உயிரிழப்பு!

சீனாவைச் சேர்ந்த 135 வயதான அலிமிஹான் என்ற மூதாட்டி கடந்த வாரம் உயிரிழந்துள்ளார்.

உலகிலேயே அதிக வயதானவர் என்று கருதப்படும் சீனாவைச் சேர்ந்த அலிமிஹான் தனது 135 ஆவது வயதில் இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார். சீனாவின் முதுமையியல் மருத்துவ சங்கம் வெளியிட்ட தகவலின் படி அலிமிஹான் 1886 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி பிறந்துள்ளார்.

எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்த அலிமிஹான் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.