வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (12:44 IST)

மலேசியாவில் கன மழை 14 பேர் உயிரிழப்பு - பல்லாயிரம் பேர் இடம்பெயர்வு

மலேசிய நாட்டில் வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. வார இறுதியில் மூன்று நாட்களாக பெய்த கன மழையால் 8 மாகாணங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

நகர, கிராமங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை வரை 51 ஆயிரம் பேர் தங்களது வீடுகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 
தலைநகர் கோலாலம்பூர், மக்கள் அடர்த்தி அதிகமுள்ள சிலாங்கூர் மாநிலத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
 
அரசின் தாமதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மக்களை அதிருப்திக்குளாக்கியுள்ளது. பல்லாயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
பலர் காணாமல் போயுள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.