1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (12:23 IST)

காசு தரலைனா உன் மனைவி வீடியோவை…! – கணவரை மிரட்டிய காவலர் சஸ்பெண்ட்!

சென்னையில் பணம் தராவிட்டால் மனைவியின் அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக கணவரை மிரட்டிய காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். முத்தியால்பேட்டை பகுதியில் இவர் தனது மனைவியுடன் கூரியர் கம்பெனி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி அந்த கூரியர் அலுவலகத்திற்கு வந்த காவலர் பெஞ்சமின் என்பவருக்கும், ஜெயப்பிரகாஷின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை தாண்டிய உறவாக தொடர இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.

அதை ஜெயபிரகாஷின் மனைவிக்கு தெரியாமல் வீடியோ எடுத்துக் கொண்ட பெஞ்சமின், தனக்கு ரூ.10 லட்சம் தராவிட்டால் இந்த வீடியோவை வெளியிட்டுவிடுவதாக ஜெயப்பிரகாஷை மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து ஜெயப்பிரகாஷ் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில் பெஞ்சமின் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்ட மாதவரம் துணை ஆணையர் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.