1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. EPS OPS protest In front of assembly

”பொய் வழக்கு போடாதே.. மக்களை வஞ்சிக்காதே!” – ஈபிஎஸ்- ஓபிஎஸ் தலைமையில் தர்ணா!

Tamilnadu
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் அமளி எழுந்த நிலையில் அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக ஆண்டு பட்ஜெட் மீதான கூட்டத்தொடர் தமிழக சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கூட்டத்தொடரை முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான விவகாரம் மீண்டும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். இதை எதிர்த்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில் அதிமுகவுடன் மற்ற எதிர்கட்சிகளான பாமக, பாஜகவும் சட்டப்பேரவையில் வெளியேறியுள்ளனர். பிறகு வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அதில் “பொய் வழக்கு போடாதே மக்களை வஞ்சிக்காதே” என கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
”எங்கப்பன் குதுறுக்குள் இல்ல”.. தூசிதட்டும் கொடநாடு கொலை வழக்கு! – அமளி செய்து வெளியேறிய அதிமுக!