வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (11:15 IST)

தமிழகத்தில் மீண்டும் வருகிறதா பைக் டாக்ஸி? – மத்திய அரசு அனுமதியால் எதிர்பார்ப்பு!

மத்திய அரசு பைக் டாக்சி சேவை இந்தியாவில் தொடர அனுமதி அளித்துள்ளதால் தமிழகத்திலும் அனுமதி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் சில ஆண்டுகள் முன்னதாக பைக் டாக்சி சேவைகள் சில நிறுவனங்கள் தொடங்கிய நிலையில் போக்குவரத்து விதிகளின்படி இருசக்கர வாகனங்களை வாடகை வாகனங்களாக கருத முடியாது என்ற அடிப்படையில் பைக் டாக்சி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு பைக் டாக்சி சேவைகளுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் விரைவில் பைக் டாக்சி சேவைகள் அனுமதிக்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக பைக் டாக்சி சேவையில் ஓட்டுபவர், அமர்ந்து செல்பவர் இருவரும் ஹெல்மெட் அணிவது, வாடகை கார்களுக்கு மஞ்சள் ப்ளேட் தருவது போல பைக் டாக்சிகளுக்கு வண்ண போர்டுகள் தருவதா என்பது குறித்தும் முடிவெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.