புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 நவம்பர் 2018 (22:07 IST)

செல்போன் பயன்படுத்த கூடாது: காவலர்களுக்கு திடீர் நிபந்தனை

பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பாதுகாப்பின் பணியின்போது செல்போன்களை பயன்படுத்தலாம் என்றும்,  அதற்கு கீழ் உள்ள பதவியில் இருப்பவர்கள் பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்த கூடாது என்றும் சற்றுமுன் தமிழக டிஜிபி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போனில் வாட்ஸ் ஆப்பில் அதிக நேரத்தை காவலர்கள் செலவழிப்பதாகவும் இதனால் பாதுகாப்பு பணியில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை என்று வந்த புகாரை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.