ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 நவம்பர் 2018 (09:55 IST)

சென்னை தி.நகரில் திடீர் சோதனை: 700 திருட்டு செல்போன்கள் பறிமுதல்

சென்னை நகரில் கடந்த சில மாதங்களாக செல்போன் வழிப்பறி அதிகமாகி வருவதாக காவல்துறையினர்களுக்கு அதிகளவில் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. வழிப்பறி செய்யப்பட்ட விலையுயர்ந்த செல்போன்கள் தி.நகரில் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாகவும் போலீசார்களுக்கு ரகசிய தகவல் வந்தது.

இந்த தகவலின் அடிப்படையில் இன்று காவல்துறையினர் சென்னை தி.நகர் அன்னை சத்யா பஜாரில் உள்ள 33 கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.  திருட்டு செல்போன்கள் வாங்கப்படுவதாக சந்தேகம் அடைந்த கடைகளில் செய்யப்பட்ட சோதனையில் 700 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இவ்வாறு பறிமுதல் செய்த செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்ணை தணிக்கை செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் செல்போன்களை தொலைத்துவிட்டு புகார் கொடுத்தவர்களிடம் சேர்க்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.