வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (08:39 IST)

ஒரு சாய்பாபா டோக்கன் … ஐயாயிரம் ரூபாய்க்கு ஷாப்பிக் – பாண்டிச்சேரி மக்களின் தீபாவளி கவலையைப் போக்கிய இடைத்தேர்தல் !

புதுச்சேரியில் நடந்த காமராஜ் நகர் இடைத்தேர்தலில் நூதனமான முறையில் காங்கிரஸ் 5000 ரூபாய் ஓட்டுக்குப் பணம் கொடுத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளோடு நேற்று புதுச்சேரியின் காமராஜ் நகருக்கும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவின் போது காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் 5000 ரூபாயைக் கையில் கொடுக்காமல் வினோதமான முறையில் காங்கிரஸ் விநியோகித்துள்ளது. அந்தத் தொகுதிக்குட்பட்ட சாமிப்பிள்ளை தோட்டத்தில் வாக்குச் சாவடி அருகே காங்கிரஸ்கார்கள் வாக்களர்களுக்கு ஒரு சாய்பாபா டோக்கனை கொடுத்துள்ளனர். அந்த டோக்கன் மூலம் 5000 ரூபாய்க்கான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதையறிந்த அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்துப் போலிஸார் சில டோக்கன்களைக் கைப்பற்றியுள்ளனர். ஆனால் காங்கிரஸ் அதற்குள்ளாகவே பல டோக்கன்களை விநியோகித்து விட்டதாக சொல்லப்படுகிறது.