நாங்குநேரியில் தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமங்கள் – வெற்றி யாருக்கு ?
நாங்குநேரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தேவேந்திர குல வேளாளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அதிமான மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ள்ளது. 66 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் தேவேந்திர குல வேளாளர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் 30000க்கும் மேற்பட்டோர் தேர்தல் புறக்கணிப்பு செய்ததாலேயே வாக்குப்பதிவு சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தங்களுக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயர் சூட்ட வேண்டுமென்று கோரிக்கையை நீண்ட நாட்களாக அவர்கள் சொல்லி வருகின்றனர். அதை எந்தக் கட்சிகளும் கண்டுகொள்ளாததாலேயே அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த தேர்தலைப் புறக்கணித்தவர்கள் வாக்குகள் தேர்தல் வெற்றிக்குப் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.