தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: இரு மாநில ஆட்சியை பிடிப்பது யார்?
தமிழகத்தில் உள்ள விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும், புதுவையில் உள்ள காமராஜர் நகர் பகுதிகளிலும் இன்று இடைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக 166 முதல் 194 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் காங்கிரஸ் கட்சி இம்மாநிலத்தில் 72 முதல் 90 இடங்கள் வரை மட்டுமே கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது
அதேபோல் ஹரியானா மாநிலத்தில் பாஜக 71 இடங்களிலும் காங்கிரஸ் 11 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பை வைத்துப் பார்க்கும்போது மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிகிறது
தமிழகத்தை பொறுத்தவரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது