செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 டிசம்பர் 2020 (07:57 IST)

துணை முதல்வர் பதவியை கேட்கின்றதா பாமக? அதிமுக வட்டாரங்கள் அதிர்ச்சி!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இருந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பாமகவின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் இந்த கூட்டணி நீடிக்குமா? அல்லது திமுக கூட்டணிக்கு பாமக மாறுமா? என்பது குறித்த குழப்ப நிலை தற்போது இருப்பதாக கூறப்படுகிறது 
 
அதிமுக கூட்டணியில் சார்பில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்திற்கு கலந்து கொள்ளுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை அழைக்க சமீபத்தில் இரண்டு அமைச்சர்கள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்க வேண்டுமானால் துணை முதல்வர் பதவி மற்றும் பாஜகவை விட அதிக தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிமுக மற்றும் பாமக கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 
 
மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என கிட்டத்தட்ட 40 தொகுதிகளை கேட்க பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதைவிட அதிகமான தொகுதி பாமக கேட்டு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது பதவியையே பாமக் கேட்கிறது என்பது தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ் அவர்களுக்கும் பேரதிர்ச்சி தான்
 
மேலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு குறித்த மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்பதிலும் பாமக உறுதியாக இருப்பதாக தெரிகிறது எனவே பாமக தலைவர் மற்றும் அமைச்சர்களுடனான இந்த சந்திப்பில் இருதரப்பிலும் எந்தவிதமான உறுதிமொழியும் கொடுக்கப்படாததால் அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன