வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (14:21 IST)

24 மணி நேர கெடு... திமுகவை கதறவிட காத்திருக்கும் பாமக!!

24 மணி நேரத்தில் தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெரும்பாலான கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் பாமக இடம் பெற வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு தயாநிதி மாறன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது,  
 
டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாசும், யார் அதிக பணம் தருகிறார்கள் என பேரம் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு திமுகவிடம் பணம் இல்லை கொள்கை மட்டும் தான் உள்ளது என பேசியிருந்தார். 
 
இது பாமகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி தயாநிதி மாறன் எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும் அங்கு கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, 24 மணி நேரத்தில் தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.