செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (21:22 IST)

’’கறுப்பு பணம் வாங்காத நடிகர்களில்.....’’ நடிகர் கமல்ஹாசன் ஓபன் டாக்

நடிகர் கமல்ஹாசனின்  கறுப்புப் பணம் வாங்காத நடிகர்களில் நானும் ஒருவன் என்று கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.

அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே நிச்சயம் தனது கட்சி வெல்லும் என எதிர்ப்பார்ப்புடன் கமல் உள்ளார்.

நேற்று மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணிக்குப் பேசிவருவதாக வெளியான தகவலை கமல் மறுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட நடிகர் கமல்ஹாசன்  திமுகவுடன் கூட்டணி சேரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னை திநகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ம.நீ.ம கட்சி வழக்கறிஞர்கள் அணி கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய கமல்ஹாசன், வழக்கறிஞர் சேம நல நிதி ரூ.7 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார்.

மேலும் நாம் நினைத்த தமிழகத்தை உருவாக்கவே அரசியல் குதித்துள்ளதாகக் கூறியுள்ள அவர், கறுப்புப் பணம் வாங்காத நடிகர்களில் நானும் ஒருவன் என்று கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான