ஹிந்தி பாடகர் மேல் காதல், அவர் பாடகரே இல்லை – ஒரு மோசடி நாடகம்

arman malik
Last Modified வியாழன், 30 மே 2019 (09:14 IST)
இந்தி பாடகர் அர்மான் மாலிக் பெயரில் தமிழ்நாட்டு பெண்களிடம் பழகி பணமோசடி செய்த நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

பிரபல ஹிந்தி பாடகர் அர்மான் மாலிக். 25 வயதாகும் இவர் தற்போது ஹிந்தி திரைப்பட உலகில் ஸ்டார் பாடகராக வலம் வருகிறார். தனி இசை ஆல்பங்களை கூட வெளியிட்டிருக்கிறார். இந்தியாவில் இவருடைய பாடலுக்கு நிறைய பெண் ரசிகர்கள் உண்டு.

அர்மான் மாலிக்கின் இந்த புகழை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் மகேந்திரவர்மன் என்ற நபர். இவர் அர்மான் மாலிக் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் ஒன்று தொடங்கி அதன் மூலம் பல பெண்களிடம் பேச்சு கொடுத்து வந்துள்ளார். பெண்களும் உண்மையான அர்மான் மாலிக்தான் பேசுகிறார் என்று நினைத்து காதல் போதையில் திளைத்திருந்த வேளையில் அவர்களுடைய அந்தரங்க புகைப்படங்களை எல்லாம் அந்த போலி ஐடிக்கு அனுப்பியுள்ளனர். அதற்கு பிறகு மகேந்திரவர்மன் தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்லி அதை கொடுக்காவிட்டால் அந்தரங்க புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து விடுவதாக மிரட்டியுள்ளார். இந்த விஷயத்தை வெளியிலும் சொல்ல தயங்கிய பெண்கள் அவன் கேட்ட தொகையை கொடுத்திருக்கின்றனர். ஒரே ஒரு பெண் மட்டும் இதுகுறித்து போலிஸில் புகார் செய்துள்ளார். அதை வைத்து மகேந்திரனை போலீஸார் கைது செய்தனர்.

இதுபோன்ற அடையாளமற்ற நபர்களிடம் நெருங்கி பழகுவதை தவிர்த்து கொள்ளுமாறும் அறிவுரை வழங்கியுள்ளனர். ஏமாற்றப்பட்ட பல பெண்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :