செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 மே 2019 (10:06 IST)

பாதி விலைக்கு தங்கம் தருவதாக மோசடி

சென்னையில் தங்க நகைகளை பாதி விலைக்கு வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீகிருஷ்ணா என்கிற நபர் பணம் அதிகமிருக்கும் நபர்களை குறிவைத்து இந்த மோசடி செயலை செய்திருக்கிறார். அவர்களிடம் தான் ஒரு பிரபல நகைக்கடயில் இருந்து பேசுவதாக கூறுவார். பின்னர் அட்சய திருதியை அன்று எக்ஸ்சேஞ்சில் வாங்கப்பட்ட பழைய நகைகள் நிறைய ஸ்டாக் உள்ளது. அதை பாதி விலைக்கு விற்க இருக்கிறோம் என கூறுவார். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரபல நகைக்கடையின் உண்மையான வங்கி கணக்கை அவர்களிடம் கொடுத்திருக்கிறார். அதில் நீங்கள் கொடுக்க வேண்டிய பணத்தில் பாதி மட்டும் செலுத்துங்கள் நேரில் வந்து நகையை வாங்கி கொள்ளும்போது மீதியை செலுத்துங்கள். பணம் செலுத்திய ரசீதை எங்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினால் போதும் என்று சொல்லியிருக்கிறார். அவர்களும் வங்கி கணக்கில் அனுப்பிவிட்டு ரசீதை வாட்ஸ் அப்பில் அனுப்புவார்கள். அந்த ரசீதை ஸ்ரீகிருஷ்ணா சம்பந்தபட்ட நகை கடையில் காட்டி நான்தான் பணம் அனுப்பினேன் என சொல்லி அந்த பணத்திற்கு நிகரான நகைகளை வாங்கி கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

இப்படியாக தொடர்ந்து பல இடங்களில் மோசடி செய்து கொண்டிருந்தவர் ஒரு நகைக்கடை வியாபாரியிடமே இந்த ட்ரிக்கை உபயோகிக்க, அவர் சமயோஜிதமாக செயல்பட்டு ஸ்ரீகிருஷ்ணாவை போலீஸில் பிடித்து கொடுத்து விட்டார்.

விசாரணையில் ஏற்கனவே இந்த ஸ்ரீ கிருஷ்ணா பல குற்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதும், அவர் மேல் பல வழக்குகள் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.