வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (08:03 IST)

குமரிக்கு பின் சென்னை: பிரதமர் மோடியின் அடுத்த பயண பிளான்!

பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வரும் மார்ச் 1ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் கன்னியாகுமரியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் ஆகியோர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் என்ற முறையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் மார்ச் 1 குமரி பயணத்தை தொடர்ந்து ஐந்தே நாட்கள் இடைவெளியில் அதாவது மார்ச் 6ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசவுள்ளார். இதில் இருந்து சென்னையில் உள்ள மூன்று மக்களவை தொகுதிகளில் ஒன்றில் பாஜக போட்டியிட போகிறது என்பது உறுதியாகியுள்ளது
 
அதிமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளை பெற்றுள்ள பாஜக, ஐந்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர முனைப்பில் இருப்பதாகவும், இதற்காக குறைந்தது ஐந்து முறையாவது பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தமிழகத்திற்கு பயணம் செய்வார்கள் என்றும் அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன