ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (15:13 IST)

ரயிலில் தூங்கிய எம்.எல்.ஏ.விடம் பணம் செல்போன் திருட்டு...

மதுரையிலிருந்து சென்னை விரைவு ரயிலில் சென்ற திமுக கொறடா சக்கரபாணி இடமிருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் செல்போன் திருடப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக கொறடாவாக இருக்கும் சக்கரபாணி, பாண்டியன் விரைவு ரயிலில் இன்று காலைவேளையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார்.
 
அந்த சமயம்  தனது கையில் கொண்டுவந்த பணப்பையை யாரோ திருடி விட்டதை அறிந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்தில்  புகார் தெரிவித்தார்.
 
அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
 
தான் கொண்டு வந்த பையில் ஒரு லட்ச ரூபாய் பணம், செல்போன், மற்றும் கையில் அணிந்து இருந்த இரண்டு சவரன் மோதிரம் ஆகியவை திருட்டுப் போனது என்று புகார் அளித்தார்.
 
முதல் வகுப்பு பெட்டியில் பயணித்த எம்.எல்.ஏவிடமே நகை பணம் திருட்டு போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு பற்றி வழக்கு பதிவு செய்த போலீஸார் குற்றவாளிகளை தேடி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.